(அக்டோபர் 14, 2015இல் வெளியான செய்தி இது)

சாய்ராம் பொறியல் கல்லூரி மாணவர்கள் மீது பல அடக்குமுறைகளை செலுத்தியதை தகுந்த ஆதாரங்களுடன் ’இப்போது.காம்’ செய்தி வெளியிட்டது. இதனால், சாய்ராம் கல்லூரி ‘இப்போது’ மீது வழக்கும் பதிவு செய்தது. அதற்கு அடுத்து 30 சாய்ராம் கல்லூரி மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களை கைதிகள் போல் நடத்துவதைக் கண்டித்து போராட்டம் நடத்தின. இவை எல்லாம் சாய்ராம் கல்லூரிக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மாணவர்களுக்குக் கால வரையற்ற விடுமுறையை அளித்துள்ளது கல்லூரி நிர்வாகம். போராட்டம் நடத்திய மாணவர்களின் பெற்றோர்களுக்கு மிரட்டல் கடிதமும் அளித்தது. மேலும், புதன் கிழமை அனைத்து பத்திரிக்கைகளுக்கும் ‘சமாதான’ மனப்போக்குடன் ஒரு விளம்பரத்தை சாய்ராம் கல்லூரி கொடுத்துள்ளது. மாணவர்கள் நல்லதுக்காகத்தான் இதெல்லாம் செய்ததாகவும் அந்த விளம்பரத்தில் உள்ளது. இந்தக் கல்லூரி டி.ஆர்.பாலுவின் உறவினருடையது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ள சாய்ராம் கல்லூரி.
ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ள சாய்ராம் கல்லூரி.

”பாலு ஒரு ஹிட்லர் மாதிரி”
“நாங்க, பாலுவுக்கு எதிரா போராட்டம் செஞ்சோம். அதுக்கப்புறம், ஹாஸ்டல் பசங்களுக்கு சாப்பாடே போடல. அவங்கள எல்லாம் அடிச்சிருக்காங்க. எங்களுக்கு நவம்பர் 2 செமஸ்டர் ஆரம்பிக்குது. அந்த தேர்வுக்கு படிக்கிறதுக்கு லீவ் விட்ட மாதிரி காமிச்சிக்குறாங்க. எங்களுக்கு எப்பவும் லீவ் விடவே மாட்டாங்க. அவங்களால நெருக்கடிய தாங்கிக்க முடியல.”, என போராட்டத்தில் கலந்துக்கொண்டு சிறை சென்ற மாணவர் ஒருவர் கூறினார்.

யார் இந்த பாலு?
கல்லூரியில் பல வருடங்களாக மாணவர்களை அடக்குவதற்காகவே இவரை, ‘வளாக பொறுப்பாளர்’ என்னும் பதவிக் கொடுத்துள்ளது. இவரின் கீழ் 45-50 ஆட்கள் மாணவர்களைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். இவரை எதிர்த்துதான் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

அடக்குமுறையை விடாத சாய்ராம் கல்லூரி
-அந்த மாணவர்களின் போராட்டத்துக்குப் பிறகு கல்லூரியே நடக்கவில்லை.

-போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் பல மாணவர்களின் பெற்றோர்களுக்கு ‘உங்கள் மகன்/மகளை கல்லூரியில் இருந்து அனுப்பி விடுவோம் என கடிதம் அனுப்பியிருக்கிறது.

சி.பி.ஐ. கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் கவிதாகிருஷ்ணனின் டுவிட்டர் பதிவு.
சி.பி.ஐ. கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் கவிதாகிருஷ்ணனின் டுவிட்டர் பதிவு.

-கல்லூரியின் ஒவ்வொரு தளத்திலும், பாலு தலைமையின் கீழ் ஆட்கள் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் மாணவர்களை கண்காணிக்கிறார்கள். இவர்கள் சொல்லுகிற ’விதிமுறைகளை’ மீறுபவர்கள் பாலுவின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரப்படுகிறார்கள். அவர்களுக்கு அதிகமான தொகையை அபராதமாக விதிக்கிறார், பாலு.

-மாணவர்களை பேராசிரியர்களே அடித்து மன உளைச்சலுக்கு மாணவர்களை ஆளாக்குகிறது.

-சிறிது நேரம் காலதாமதமாக சென்றாலும், அபராதம் நிச்சயம்.

-மாணவர்களின் தனிப்பட்ட விசயங்களில் அதிகம் தலையிடுவதாக மாணவர்கள் சொல்கிறார்கள். வாட்ஸாப், ஃபேஸ்புக் ஆகியவற்றில் மாணவர்களின் மெசேஜ்களை பெற்றோர்களுக்கு காண்பிப்பதாகவும் இவர்கள் புகார் கூறுகின்றனர்.

-தேர்ச்சி விகிதத்தில் முதலாவதாக தேர்ச்சி பெறாத மாணவர்களை கல்லூரியை விட்டே நீக்கி விடுகிறார்கள்.

-அசைவ உணவுக்கு அனுமதி இல்லை. கேண்டீனில் உணவு மிகவும் மோசமாக இருப்பதாக மாணவர்கள் கூறுகிறார்கள். மேலும், ஒரு பெங்கால் இஸ்லாமிய மாணவன் பக்ரீத் பண்டிகைக்கு விடுமுரை எடுத்ததற்கும் அபராதம் விதித்து மத ரீதியான பிரச்சனைகளை உருவாக்கியுள்ளது இக்கல்லூரி.

-மாணவிகள் லெகின்ஸ் அணிய மட்டும் தடை இல்லை. அவர்கள் சுடிதாரைக் கூட அவர்கள் எண்ணத்திற்கு போல் போட்டாலும், “நீ காலேஜ்க்கு படிக்கத்தான வர்ற. இல்ல, வேற எதுக்காவது வர்றீயா?” என வாசலில் விசாரிக்கிறார்கள்.

இன்னும் பல மதம், உணவு, உடை, பேச்சு, ஆண்-பெண் உறவு போன்ற விசயங்களில் மாணவர்களின் சுதந்திரத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது சாய்ராம் கல்லூரி. ஆனால், இந்தத் தவற்றை பொதுமக்களுக்கும், பெற்றோர்களுக்கும் மறைக்கவே இந்த மாதிரியாக ஊடகங்களில் செய்தியை வெளிப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here