(அக்டோபர் 15, 2015இல் வெளியான செய்தி)

அப்துல் கலாம் கண்டறிந்த இலகுரக காலிபர் மாற்றுத்திறனாளிகள் யாருக்கும் போய் சேரவில்லை என்ற செய்தியை ’இப்போது.காம்’ வியாழக்கிழமை ஆதாரத்துடன் வெளியிட்டது. அதன் தாக்கமாக, மாற்றுத்திறனாளிகளுக்கு இலகுரக காலிபரை விரைந்துக் கொடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மு.க.ஸ்டாலின் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், “அப்துல் கலாமின் 84-வது பிறந்தநாளான அக்டோபர்15 அன்று மாணவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவருடைய மிகச்சிறந்த கண்டுபிடிப்பான இலகுரக காலிபரை மாற்றுத்திறனாளிகளுக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இதில், மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க இலகுரக காலிபர் மாற்றுத்திறனாளிகள் யாருக்கும் போய் சேரவில்லை