இப்போது செய்தியின் தாக்கம்: தலித்துகளை பிஎச்.டியில் சேர்க்க புதுச்சேரி பல்கலை.க்கு தேசிய மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தல்

0
434
தலித்துகளுக்கு பிஎச்.டி வாய்ப்பு கேட்டு போராடும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள்.

சுமார் இருபதாண்டு காலமாக பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகம் தலித்துகளுக்கு பிஎச்.டி (முனைவர் பட்டம்) படிக்கும் வாய்ப்பை மறுத்து வருவதைப் பற்றிய விரிவான செய்திகளை இப்போது டாட் காம் தொடர்ந்து வெளியிட்டது; இந்த நிலையைச் சரி செய்வதற்கு மத்திய மனித வள அமைச்சகம் 2006இல் வெளியிட்ட சிறப்பு உத்தரவையும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் மதிக்கவில்லை என்பதை இப்போது சுட்டிக்காட்டியது; பல்கலைக்கழகத்தின் இந்தப் பாரபட்சமான அணுகுமுறையால் பாதிக்கப்பட்ட மாணவர் சுதிஷ் தேசிய மனித உரிமை ஆணையத்துக்குப் புகார் செய்திருந்தார்.

டிசம்பர் 16, 2016 (வெள்ளிக்கிழமை) அன்று தேசிய மனித உரிமை ஆணையத்தின் பிரதிநிதிகள் புதுச்சேரிக்கு வந்து பல்கலைக்கழக பிரதிநிதிகள், புதுச்சேரி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்; பல்கலைக்கழகம் தலித் மாணவர்களுக்கு உடனடியாக பிஎச்.டி படிக்கும் வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்; பிஎச்.டி படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் நடந்து வரும் “மோசடி” உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்