இப்படியொரு வசூல் தமிழில் சாத்தியமில்லை – தனஞ்செயன் என்ன சொல்ல வருகிறார்?

0
415
Ram Charan & Samantha

ரங்கஸ்தலம் படம் 150 கோடிகள் வசூலித்திருப்பதாக செய்திகள் வருகின்றன. இதனை முன்வைத்து, இப்படியொரு வசூல் தமிழில் சாத்தியமில்லை என ட்வீட் செய்துள்ளார் தயாரிப்பாளர் தனஞ்செயன். ஏன் இப்படியொரு ட்வீட்டை அவர் வெளியிட்டார்?

தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் பைரஸி மிகக்குறைவு அல்லது இல்லவேயில்லை. தமிழில் அப்படியல்ல, பைரஸி மிக அதிகம். அதனாலேயே தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் படங்கள் நன்றாக வசூலிக்கின்றன. தமிழ்ப் படங்கள் குறைவான வசூலையே பெறுகின்றன என தனஞ்செயன் கூறியுள்ளார்.

தமிழில் வெளியான பைரவா முதல் சி3 வரை 100 கோடிகளை கடந்து வசூலித்ததாக தயாரிப்பாளர்கள் விளம்பரம் செய்தார்களே… அதெல்லாம் பொய்யா?

இதையும் படியுங்கள்: “அசிஃபாவை கொன்றது சரியே” – சமூக ஊடகத்தில் பதிவிட்டவரை பணி நீக்கம்…

இதையும் படியுங்கள்: மனைவியிடம் இழந்த நம்பிக்கையைத் திரும்பப் பெறுவது எப்படி?

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்