இப்படியெல்லாமா செய்வாங்க… மகாராஷ்டிராவில் 10 வழிகளில் ஜனநாயகத்தை கொலைசெய்து பாஜகவை அரியணையில் ஏற்றிய மோடி, அமித் ஷா

The two leaders knew they could not afford to let the Maharashtra government out of their hands and had prepared the ground, from day one, to ensure the BJP returned to power.

0
529

மகாராஷ்டிராவில் ஆட்சியை விட்டுத்தர முடியாது என்று முடிவெடுத்தவர்கள் மோடியும் அமித் ஷாவும் . 

 சனிக்கிழமை காலையில் மக்கள் தூங்கி கொண்டிருந்த வேளையில் அரசியல் சாசன விதிகளை கிழித்தெறிந்து ஜனநாயகத்தைக் கொலை செய்து – அதில்  தலை சிறந்தவரான பிரதமர் மோடி டிவிட்டரில் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றிருக்கும்  முதல்வர் பட்னாவிஸ் -க்கும் துணை முதல்வராக  பதவியேற்றிருக்கும் அஜித் பவாருக்கும் வாழ்த்துகளை பதிவிட்டார். 

காலையில் வெளிவந்திருந்த அனைத்து செய்தித் தாள்களிலும் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் முதல்வராவார் என்ற தலைப்பு செய்திகளே இருந்தது . வெள்ளிக்கிழமை மாலை இந்தச் செய்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவித்தார். 

உத்தவ் தாக்கரே பற்றிய சரத் பவாரின் அறிவிப்பு, பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் போருக்கான அறிவிப்பாக இருந்தது. மகாராஷ்டிராவில் பதவியை விட்டுத் தருவதற்கு மோடியும் அமித் ஷாவும் தயாராக இல்லை.  பாஜகவே ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது. மோடியும் அமித் ஷாவும் ஏற்கனவே விதிமுறைகள் மற்றும் கொள்கைகள் பற்றி கவலைபட்டதில்லை. அவர்கள் எந்த தயக்கமும் சங்கடமும் வெட்கமும்  இல்லாமல் ஆட்சியை தக்க வைக்க செய்ய வேண்டியதை செய்தார்கள்.  

தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியமைக்க அதாவது பாஜக மறுபடியும் ஆட்சி அமைக்க 10 வழிகளில் மோடியும் , அமித் ஷாவும் ஜனநாயகத்தைக் கொன்றுள்ளனர். 

  1. மகாராஷ்டிரா தேர்தலுக்குமுன் மோடி அரசு தங்களுடைய பழிவாங்கும்  கருவியான சிபிஐ, அமலாக்கத்துறையை தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் , சரத் பவார் , பிரஃபுல் பட்டேல் ஆகியோர் மீது  ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஏவினர் . 
  2. தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமானதாக அமையவில்லை. பாஜகவுக்கு போதுமான எம் எல் ஏக்கள் இல்லை என்றவுடன் சிவசேனாவுடன் செய்திருந்த ஒப்பந்தத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாததால் , அவர்களுடைய கவர்னர் பகத் சிங் கோஷியாரியை தங்கள் கைகளுக்குள் வைத்துக் கொண்டு ஆட்சியமைப்பதை இழுத்தடித்தது. 
  3. பாஜகவின் கவர்னர் தேவேந்திர பட்னாவிஸை ஆட்சியமைக்க அழைத்து 48 மணி நேரம் கொடுத்தார். அவரால் முடியாததால் சிவ சேனாவுக்கு 24 மணி நேரம் கொடுத்தார். அவர்கள் தங்களுக்கு அதிக நேரம் வேண்டும் என்று கேட்டபோது மறுத்த கவர்னர் தேசியவாத காங்கிரசுக்கு 24 மணி நேரம் கொடுத்தார். அந்த காலம் முடிவடைவதற்கு முன்னரே குடியரசு தலைவர் ஆட்சிக்கும் பரிந்துரை செய்தார்
  4. மத்திய அமைச்சரவை உடனே குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த உத்தரவிட்டு ராம் நாத் கோவிந்துவின் ஒப்புதலையும் பெற்றது .  இந்த குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது பாஜக மற்றக் கட்சிகளை உடைக்க எடுத்துக் கொண்ட நேரம். 
  5. காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணி தங்களுடைய கருத்தியல் மற்றும் அரசியல் வேறுபாடுகளை மறந்து கூட்டணி அமைத்து சிவ சேனாவின் உத்தவ் தாக்கரேயை  முதல்வராக அறிவித்த போது பாஜகவின் மோடியும்  அமித் ஷாவும் அவர்கள் ஆட்சிக்கு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய தயாரானார்கள். 
  6. MHDC ஊழலில் அஜித் பவாரை அமலாக்கத் துறை விசாரித்தது . நீர்ப்பாசன மோசடியையும் விசாரிப்பதாக இருந்தது . இதனை வைத்தே மோடி , அமித் ஷா அஜித் பவாரிடம் ஒப்பந்தம் பேசியிருக்கிறார்கள். தேவேந்திர பட்னாவிஸ் அரசுக்கு ஆதரவு கொடுத்தால் துணை முதல்வர் பதவியும்,  மோசடி வழக்குகள் விசாரிக்கப்பட மாட்டாது என்பதுமே அந்த ஒப்பந்தம்.   
  7. அஜித் பவார்  தனது கட்சி எம் எல் ஏக்களின் கையெழுத்துக்களை வேறு ஏதோ காரணங்கள் சொல்லி பெற்றிருக்கிறார். தங்களின் வருகையை பதிவு செய்வதற்காக போட்ட கையெழுத்தை தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக ஆதரவு தெரிவித்து  போட்டதாக காட்டியிருக்கிறார் அஜித் பவார் என்று தேசியவாத காங்கிரஸ் எம் எல் ஏக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
  8. குடியரசு தலைவரை எழுப்பி அவரிடம் கையெழுத்துப் பெற்று குடியரசு தலைவர்  ஆட்சியை காலை 5.47 மணிக்கு திரும்பப் பெற்றுள்ளனர் மோடி அமித் ஷா கூட்டணி.  இதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் வேண்டும் ஆனால் அதெல்லாம் பின்பற்றப்படவில்லை. 
  9. சரத் பவார் உத்தவ் தாக்கரேயை முதல்வர் என்று  அறிவித்ததை எல்லாம் சரிபார்க்க கவர்னர் கோசியாரி முயற்சி ஏதும் செய்யவில்லை. தேவேந்திர பட்னாவிஸ் காலை 7.30 க்கு முதல்வராக பதவியேற்றார்.   
  10. தேவேந்திர பட்னாவிஸ் தனது ஆட்சியை தக்க வைக்க ஒரே ஒரு வழிதான்  இருக்கிறது தேசியவாத காங்கிரஸின் 38 எம் எல் ஏக்களை பாஜகவுக்கு ஆதரவு தர செய்வது அதாவது அஜித் பவாருக்கு தனக்கு ஆதரவு தர செய்வது . அதைவிடக் குறைந்தால் ஆட்சியில் நிலைக்க முடியாது . தற்போது தேசியவாத காங்கிரசின் 9 எம் எல் ஏக்களை மும்பையிலிருந்து டெல்லிக்கு தனி விமானம் மூலம் அழைத்து சென்றிருக்கிறது பாஜக தலைமை.  

 https://thewire.in/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here