சமூகவலைதளங்கள்தான் இன்றைய தலைமுறையின் பேச்சு மூச்சு எல்லாமே. அப்படிபட்ட இந்த சமூகவலைதளங்களில் நல்லது , கெட்டது என எல்லாமே இங்கு சரிக்குசமமாக பரந்து விரிந்து கிடக்கிறது. நாள் முளுவதும் பலரும் தங்களின் நேரத்தை இந்த சமூகவலைதளங்களில் தான் செலவிட்டு வருகின்றனர்.

சமீப காலங்களில் பேஸ்புக் பெரிய அளவில் தங்கள் பக்கத்தில் வீடியோ பதிவுகளுக்காகன கவனத்தைச் செலுத்தி வருகிருறது. அதனால் அவர்களுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராமிலும் சிறந்த அதிக மணித்துளிகள் ஓடக்கூடிய விடியோக்களை பதிவிட வழிவகை செய்வதில் ஒன்றும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதன் மூலம் அவர்களின் விளம்பர வருவாய் கண்டிப்பாக இருமடங்காகுமென்பது அவர்களின் கணிப்பாகவும் இருக்கலாம்.

பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் கூகுள் ப்ளஸ் என எராளமான சமூகவலைதள பக்கங்கள் உலா வரும் நிலையில், இத்தளங்களில் இ டப்படும் வீடியோ பதிவுகளுக்கு வரவேற்பு அதிமாகவே உள்ளது. மேலும் தற்போதுள்ள ஆப்ஸ் மூலம் சினிமா பாடல்கள், வசனங்கள் போன்றவற்றை நடித்து, பதிவேற்றி பலர் லைக்குகளை அள்ளி வருகின்றனர்.

ஆனால் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வெறும் 60 விநாடிகளே ஓடும் வீடியோக்களை மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும். இது பயனாளர்களுக்கு எப்போதும் ஏமாற்றமாகவே இருந்த்து.

இந்நிலையில், தற்போது THE WALL STREET JOURNAL, இன்ஸ்டாகிராமில் ஒரு மணி நேரம் ஓடும் விடியோக்களை பதிவிடும் வசதி விரைவில் வரப்போவதாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது இன்ஸ்டாகிராம் பயனாளர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுமார் 800 மில்லியன் பயனாளர்களை வைத்திருக்கும் இன்ஸ்டாகிராம் வலைதளம் நீண்ட நெடிய வீடியோக்களை பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசனை செய்து வருகிறது. இனி என்ன,இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு ஜாலிதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here