இன்றைய(நவ.19) தங்கம் விலை நிலவரம்

Gold Price in Chennai (19th November 2020).

0
92

சென்னையில்இன்று(வியாழக்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4747 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று(புதன்கிழமை) மாலை இதன் விலை ரூ.4780 இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 குறைந்துள்ளது.

அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி  ரூ.38,240 க்கு விற்பனை செய்யப்பட்டஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ.264 குறைந்து ரூ.37,976-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலைகோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.4747 விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,990 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,731 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,730 ஆகவும், கேரளாவில் ரூ.4,762 ஆகவும், டெல்லியில் ரூ.4,936 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,956 ஆகவும், ஒசூரில் ரூ.4,787 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,788 ஆகவும் இருக்கிறது.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.67.70லிருந்து இன்று ரூ.66.70 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 66,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த  வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்தது. மேலும் இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள் அன்று தங்கம் விலை உயந்தது. அதனை தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here