சியோமி நிறுவனத்தில் போகோ F1, இன்று(செப்டம்பர் 05, 2018) பகல் 12 மணி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. போகோ F1 இரண்டு வாரத்துக்கு முன்னர் அறிமுகப்படுத்திய பின்னரான இரண்டாவது ஃப்ளாஷ் விற்பனை இதுவாகும்.

DmP_Xo6W0AAVw5g

எம்ஐ.காம் மற்றும் ஃப்ளிப்கார்ட் தளங்களில் இந்த போனை தற்போது வாங்க முடியும். விற்பனைக்கு வரும் சில நிமிடங்களில் போகோ F1 போன்கள் காலியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரத்தில் மட்டும், 5 நிமிடத்தில் 1 லட்சம் போகோ F1 போன்கள் விற்கப்பட்டுள்ளதாக சையோமி நிறுவனம் கூறியுள்ளது. 1 வினாடிக்கு 300 போன்கள் வீதம் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விற்பனைக்குப் பிறகு சியோமி, தனது ரெட்மி 6 ஸ்மார்ட் போனை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது.

DmCXxLHW0AASX69

போகோ F1 விபரங்கள் :

இந்த போனில் 6.1 இன்ச் ஃபுல் டிஸ்ப்ளே, 18.7:9 ஆஸ்பக்ட் ரேஷியோ, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. போனின் பின் புறம் 12 + 5 மெகா பிக்சல் டூயல் கேமராவும் 20 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவும் இணைக்கப்பட்டுள்ளது. பிங்கர் ப்ரிண்ட் ஸ்கேனர் மற்றும் ஃப்பேஸ் ஸ்கேனர் ஆகியவையும் இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பைக் கூட்டுகின்றன. 4,000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, குயிக் சார்ஜ் 3.0, 4ஜி+ போன்ற கட்டமைப்பு வசதிகளும் உண்டு.

DmCXxl9W0AAjuEM

போகோ F1 போனின் விலை விபரம் :

6 ஜிபி ரேம், 64 ஜிபி உள் சேமிப்பு வசதி கொண்ட போகோ F1 போனின் விலை 20,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி உள் சேமிப்பு வசதி கொண்ட போகோ F1 விலை 23,999 ரூபாய்க்கு விற்கப்படும். இவை இரண்டும் அல்லாமல், 8 ஜிபி ரேம் மற்றும் 256 உள் சேமிப்பு வசதி கொண்ட போன் 28,999 ரூபாய்க்கு வாங்க முடியும்.

இந்த போன்களுக்கு எல்லாம் மேலாக போகோ F1 ஆர்மர்டு வெர்ஷன் போன் இருக்கும். அதில் 8 ஜிபி ரேம், 256 ஜிபி உள் சேமிப்பு வசதி இருக்கும். அதன் விலை, 29,999 ரூபாயாகும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்