மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன் இன்று(சனிக்கிழமை, அக்டோபர் 06) முதல் விற்பனைக்கு வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன், ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர், 5,000 mAh பேட்டரி மற்றும் நாட்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது. கடந்த செப்.24 அன்றே, பிளிப்கார்ட்டில் இந்த மொபைலுக்கான முன்பதிவு தொடங்கியது.

DovgEo5UcAE4g1U

மோட்டோரோலா ஒன் பவர் இந்தியாவில் ரூ.15,999க்கு கிடைக்கும். 4ஜிபி ரேம்/ 64ஜிபி இன்பில்ட் மெமரி கொண்டுள்ளது. பிளிப்கார்ட்டில் இன்று பிற்பகல் 12 மணி முதல் இந்த மொபைல் விற்பனைக்கு வந்துள்ளது.

தற்போது ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தில் இயங்குகிறது. மேலும் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட் மற்றும் ஆன்ட்ராய்டு கியூ அப்டேட் ஆகியவையும் வழங்கப்படுகிறது. 6.2 இன்ச் (2246×1080) பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே, 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14 என்எம் பிராசஸர், அட்ரினோ 509 ஜிபியூ கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் , பின்பக்கம் இரண்டு கேமரா கொண்டுள்ளது. 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் ஆகியவையும் உள்ளன. மேலும் 12 எம்.பி. செல்ஃபி கேமராவும் கொண்டுள்ளது.

64ஜிபி மெமரியும், 256ஜிபி வரை மைக்ரோ SDகார்ட் துணையுடன் மெமரியை நீட்டித்துக்கொள்ளலாம்.

பின்பக்க கைரேகை சென்சார், யூஎஸ்பி – சி டைப் சார்ஜிங், 5,000mAh பேட்டரி கொண்டுள்ளது. 15w டர்போ சார்ஜிங் கொண்டுள்ளதால், 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் வரை மொபைலை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

( இச் செய்தி பல தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here