இன்று (பிப்.,10) நேரில் ஆஜராக நடிகர் விஜய்க்கு சம்மன்

Income Tax officials issue summons to Vijay

0
189

இன்று(திங்கள்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

‘பிகில்’ படத்திற்காக வாங்கிய சம்பளம் தொடர்பாக கடந்த வாரம் நடிகர் விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி.யில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக படப்பிடிப்பிலிருந்த விஜய்யை, வருமான வரித்துறையினர் சென்னை அழைத்து வந்து விசாரித்தனர்.

மேலும் விஜய் வீட்டிலும் வருமான வரித்துறையின் சோதனை நடைபெற்றது. ஆனால் அவர் வீட்டிலிருந்து ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த விவரங்களை வருமான வரித்துறை வெளியிடவில்லை. பின்னர் வருமான வரித்துறை சோதனை முடிவடைந்த நிலையில், சோதனைக்கு பிறகு கடந்த 2 நாட்களாக விஜய் வழக்கம் போல் படப்பிடிப்பிற்கு சென்றார்.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று (பிப்.,10) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சினிமா பைனான்சியர் அன்புச்செழியன், கல்பாத்தி எஸ்.அகோரம், ஏஜிஎஸ் நிர்வாகிகள் ஆகியோரும் இன்று ஆஜராக வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.77 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here