இன்று( செப்.18) விற்பனைக்கு வரும் ரெட்மி 9i

Redmi 9i smartphone was launched on 15th September 2020.

0
106

ஜியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி 9i  ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது. இது அடிப்படையில் உலகளாவிய ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும். 

புதிய ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஹெச்டி பிளஸ் டாட் டிராப் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஆரா 360 டிசைன் கொண்டிருக்கும் ரெட்மி 9ஐ 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

ரெட்மி 9i  சிறப்பம்சங்கள்:

 • 6.53 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20:9 ஐபிஎஸ் எல்சிடி டாட் டிராப் ஸ்கிரீன்
 • 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்
 • IMG பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
 • 4 ஜிபி LPDDR4x ரேம்
 • 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • டூயல் சிம்
 • ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 11
 • 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
 • 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
 • 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
 • ஸ்பிலாஷ் ப்ரூஃப்
 • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
 • மைக்ரோ யுஎஸ்பி 
 • 5000 எம்ஏஹெச் பேட்டரி
 • 10 வாட் சார்ஜிங்

ரெட்மி 9i  ஸ்மார்ட்போன்மிட்நைட் பிளாக், சீ புளூ மற்றும் நேச்சர் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை விபரம்:

 • 4 ஜிபி, 64 ஜிபி மெமரிமாடல் விலை ரூ. 8299
 • 4 ஜிபி, 128 ஜிபி மெமரிமாடல் விலை ரூ. 9299

ரெட்மி 9i ஸ்மார்ட்போனின் முதல் இந்திய விற்பனையானது இன்று( செப்டம்பர் 18) மதியம் 12:00 மணிக்கு பிளிப்கார்ட், மி ஹோம் மற்றும் மி.காம் வழியாக நடக்கும். இது ஆஃப்லைன் மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here