மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது….

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த வர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தமிழகத்தில் முதன்முறையாக இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இந்த ஆண்டு முதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் முதன்முதலாக இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் மற்றும் கலந்தாய்வை இணையதளம் மூலம் நடத்துகிறது. இன்று(வெள்ளிக்கிழமை) சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இன்று(வெள்ளிக்கிழமை) சிறப்புப் பிரிவினருக்கு ஒற்றை சாளர முறையிலான கலந்தாய்வு தொடங்குகிறது.

இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள சிறப்பு பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நடைபெறுகிறது.இதற்கான தகவல் மாணவர்களுக்கு இ – மெயில் மூலமாகவும், எஸ்.எம்.எஸ்., வழியாகவும் அனுப்பப்பட்டுள்ளது.

நாளை(சனிக்கிழமை)7ஆம் திகதி நடைபெற உள்ள கலந்தாய்வில் முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கான ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஜூலை 8-ந்தேதி கலந்தாய்வு விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.

காலை, 9 மணி,, 10:30 மணி, நண்பகல் 12 மணி மற்றும் மதியம் 2 மணி என 4 கட்டங்களாக நாளை கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை,ஜுலை 10ஆம் தேதிக்கு பின்னர் அவை நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்