மேஷம்:
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலையிடத்தில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். வெளியூருக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அதனால் அனுகூலங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றத்துடன் கூடிய பதவி உயர்வும் ஊதிய உயர்வும் தானாக உங்களைத் தேடி வந்து சேரும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

ரிஷபம்:
உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவதற்கான முயுற்சி செய்வார்கள். உயர் அதிகாரிகளினுடைய ஆதரவினால், நீங்கள் திட்டமிட்ட பணிகளை மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பார்கள். தேவையில்லாத வீண் அலைச்சல்கள் குறைந்து மனதுக்கு நிம்மதியான சூழல்கள் உருவாகும். பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்ற விரும்பி அதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதனால் தொழிலில் முதலீடுகள் செய்வதற்கு முன்பாக, நன்கு யோசித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய எதிர்கால நலன் கருதி, சில செயல்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வியில் கொஞ்சம் கவனம் தேவைப்படுகிறது. வழக்கு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கொஞ்சம் யோசித்து முடிவெடுங்கள். உத்தியோகத்தில் இருக்கின்றவர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் மாறி மாறி வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.
கடகம்:
வேலை தேடிக்கொண்டிருக்கிறவர்களுக்கு உங்களைத் தேடி நல்ல செய்திகள் வந்து சேரும். நீங்கள் செய்து முடிக்கத் திட்டமிட்டிருந்த பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பதற்கான சாதகமான சூழல்கள் உங்களுக்கு உருவாகும். குடும்பத்தைப் பற்றிய மனக்கவலைகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்துக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்:
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களுடன் சின்ன சின்ன மனக்கசப்புகள் உண்டாக வாய்ப்புகள் இருப்பதால், கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. எந்த காரியமாக இருந்தாலும், அதை கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. நீங்கள் எதிர்பாராத அளவில் அலைச்சலும் வீண் பதற்றமும் உண்டாகும். எதையும் எதிர்கொள்கின்ற போராட்ட குணங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமாகவும் இருக்கும்.

கன்னி:
கலைத் துறையில் இருக்கின்றவர்குளுக்கு இதுவரைக்கும் இருந்து வந்த தடைகள் நீங்கி, உங்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வெளியூருக்கு பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது, பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிக்க ஆயத்தம் ஆவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடைய மனதுக்குள் உங்களுக்கான செல்வாக்குகள்உயர ஆரம்பிக்கும். உயர் அதிகாரிகளுடைய முழு ஒத்துழைப்பும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம்:
உத்தியோகத்தில் இருக்கின்றவர்களுக்கு முக்கியமான பொறுப்புகள் வந்து சேரும். கெடமை அதிகரிக்கும். வீட்டுக்கு பொன்னும் பொருளும், சொத்து சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். இதுவரையில் தடைபட்டு வந்த காரியங்கள் யாவும் கொஞ்சம் கால தாமதத்துடன் நடந்து முடியும். உறவினர்களின் மூலமாக, மனதுக்குள் புதுவிதமான தைரியம் பிறக்கும். எதிலும் கொஞ்சம் முன்னேற்றமான சூழல்கள் காணப்படும். நீங்கள் எதிர்பார்த்த தன வரவினால், இன்னல்கள் குறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்:
மனதுக்குள் ஆன்மீக எண்ணங்கள் வந்து போகும். உடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் உறவினர்களுடன் பேசும்போது, கொஞ்சம் கவனமாக இருங்கள். எந்த ஒரு காரியத்தையும் யோசித்துச் செய்வது நல்லது. தேவையில்லாத வீண் விவாதங்களில் தலையிடாமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட காரியங்களில் சின்ன சின்ன தடைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

தனுசு:
மனதுக்குள் புதுவிதமான ஆசைகள் வந்து போகும். உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் இருப்பது தான் நல்லது. கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். புதிதாக ஏதாவது பொருள்கள் வாங்கும்போது, கொஞ்சம் சிந்தித்து செயல்பட வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

மகரம்:
தொழிலில் ஏற்படுகின்ற பிரச்னைகளுக்கு பல புதிய யுக்திகளைக் கையாண்டு, சரி செய்வீர்கள். கணவன் மனைவியாகிய தம்பதிகளுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, ஒற்றுமைகள் மேலோங்கும். நண்பர்களுக்கு இடையே உங்களுடைய கருத்துக்களுக்கு மதிப்புகள் கூடும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும்.
கும்பம்:
பணிகளில் நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகளை நீங்கள் எடுப்பதற்கு முன்பாகச் சிந்தித்துச் செயல்படவும். வீடு மற்றும் வாகனங்களில் சில மாற்றங்களைச் செய்து மகிழ்வீர்கள். வழக்குகளில் உங்களுக்கு அனுகூலமான தீர்வுகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மீனம்:
உங்களுடைய உறுப்பினர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதங்களைத் தவிர்த்து கொஞ்சம் அமைதியுடன் செயல்படுவது நல்லது. உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ளும் போது, மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். போட்டிகளில் கலந்து கொள்கின்றவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உங்களுடைய ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்