நாட்டில் வெங்காய உற்பத்தியில் முன்னணி வகிக்கும், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் தொடர் மழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவால் வெங்காய வரத்து நாடு முழுவதும் குறைந்துள்ளது. தமிழகத்துக்கு. 70 லாரிகளில் தினமும் கொண்டு வரப்படும் வெங்காயம், நேற்று வெறும் 30 லாரிகளில் மட்டுமே விற்பனைக்கு வந்தது. ஆகவே வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. சென்னையில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 200 ரூபாயை தொட்டுள்ளது.

தட்டுப்பாடு காரணமாக உயர்ந்துள்ள வெங்காய விலையை கட்டுப்படுத்த, ஏற்றுமதிக்கு தடை, வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கு கட்டுப்பாடு என பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது

இநிந்லையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் கிலோ 180 ‌ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே சில்லறை விற்பனையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம்‌ மற்றும் பெரிய வெங்காயம் ‌தலா 220 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. திருச்சி வெங்காய மண்டியில் மொத்த விற்பனையில் சிறிய வெங்காயம் கிலோ 100 ரூபாய் வரைக்கும் பெரிய வெங்காயம் 140 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் சின்ன வெங்காயம் 140 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 170 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

மதுரை காய்கறிச் சந்தையில் ஒருகிலோ சின்ன வெங்காயம் 140 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 130 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் சின்ன வெங்காயம் 170 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தின் இந்த விலை உயர்வு அடுத்த இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here