சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படம், ஆக.2 சுலோவீனியா நாட்டில் தொடங்கியுள்ளது. அஜித்துடன், காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் 90 சதவீத காட்சிகள் வெளிநாட்டில் படமாகிறது. அஜித் இதில் இன்டர்போல் அதிகாரியாக நடிப்பதாக படத்தை தயாரிக்கும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் அலுவலக வட்டாரம் தெரிவிக்கிறது. கமலின் இளைய மகள் அக்ஷரா இதில் அஜித்துடன் பணிபுரிகிறவராக வருவதாகவும், அவருக்கு ஆக்ஷன் காட்சிகள் இருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

இந்தப் படத்துக்கு வில்லனாக யாரை நடிக்க வைப்பது என்பதில் நிறைய குழப்பங்கள் இருந்தது. அரவிந்த்சாமி, அர்ஜுன், விஜய் சேதுபதி என பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. சமீபத்திய செய்தி, பாபி சிம்ஹாவை வில்லனாக ஒப்பந்தம் செய்யவிருக்கிறார்கள். நேரம், ஜிகிர்தண்டா படங்களில் பாபி சிம்ஹாவின் வில்லத்தனம் பெரிதும் பேசப்பட்டதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இன்டர்போல், சர்வதேச குற்றம் என்று முழுக்க வெளிநாடுகளில் எடுக்கப்படும் படத்துக்கு பாபி சிம்ஹா என்ற வில்லன் போதுமா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்