இன்ஃபோசிஸ் முதன்மை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக சலில் பரேக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இன்ஃபோசிஸ் முதன்மை செயல் அதிகாரியாக இருந்த விஷால் சிக்கா, கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இன்ஃபோசிஸ் நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து, புதிய இடைக்கால நிர்வாக இயக்குநராக மற்றும் முதன்மை செயல் அதிகாரியாக பிரவின் ராவ் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சலில் பரேக் இன்ஃபோசிஸ் முதன்மை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஜனவரி 2ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.

சலீல் பரேக் யார் இவர்?

மும்பை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங் துறையில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார். கர்னல் பல்கலைக்கழகத்தில் கம்பியூட்டர் சயின்ஸ் மற்றும் மெக்கானிகல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கேப்ஜெமினி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் இருந்துள்ளார்.

இதையும் படியுங்கள்: அன்புசெழியன்… களையை பிடுங்கலாம், களத்தை என்ன செய்வது? – கோலிவுட் வேதாளம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்