DgwgA0sUwAAN02X

இன்று (வியாழக்கிழமை) முதல் சாம்சங் கேலக்ஸி ஜே8 ஸ்மார்ட்ஃபோனின் இந்தியாவில் விற்கப்படும். இந்த வார துவக்கத்தில் ஜூன் 28ஆம் தேதி ஸ்மார்ட்ஃபோன் விற்பனைக்கு வரும் என அறிவித்த சாம்சங் நிறுவனம் புதன்கிழமை (நேற்று) அத்தகவலை உறுதிபடுத்தியது.

சாம்சங்குடைய இன்ஃபினிடி டிஸ்ப்ளே தொகுப்பு (Samsung’s Infinity Display series) அங்கமான இந்த ஃபோன் சென்ற மாதம் கேலக்ஸி ஜே6 உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. 18:5:9 சூப்பர் ஆமோலெட் (AMOLED) இன்ஃபினிடி திரை மாற்றும் ஆன்ட்ராய்ட் 8.0 ஓரியோ ஆகியவை இதன் சிறப்பம்சங்கள் .

முக அங்கீகாரம் (Face Unlock ) மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களான (artificial intelligence) பொருள் மற்றும் காட்சி கண்டறிதல் போன்றவையும் உள்ளன. இரட்டை கேமராவுடன் வரும் கேலக்ஸி ஜே8ல் பின்னணியை மங்கலாக்கி முன்னணியை தெளிவாக்கும் ‘லைவ் ஃபோகஸ்’ (Live Focus) அம்சம் உள்ளது.

புகைப்படம் எடுத்த பிறகும் எடுக்கும் முன்னரும் இதன் அளவை தேர்வு செய்யலாம். “எங்களுடைய தனிச்சிறப்பான இன்ஃபினிடி டிஸ்ப்ளே, சேட் ஓவர் வீடியோ மற்றும் சாம்சங் மால் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இன்றைய தலைமுறையினர் அதிகம் பயன்படுத்தும் அம்சமான கேமராவை மேம்படுத்தியுள்ளோம்,” என்றார் சாம்சங் இந்தியாவின் மொபைல் வர்த்தக இயக்குனரான சுமித் வாலியா. “இனி பயன்பாட்டாளர்கள் தங்களது புகைப்படங்களை வேறு செயலிகள் மூலம் திருத்த வேண்டிய தேவை இல்லை.

எங்களது லைவ் ஃபோகஸ் அம்சத்தோடு போர்ட்ரெய்ட் டோல்லி (Portrait Dolly), போர்ட்ரெய்ட் பேக்ட்ராப் (Portrait Backdrop) மற்றும் பேக்ரௌண்ட் ப்லூ ஷேப் (Background Blue shape) ஆகிய அம்சங்களும் உள்ளன.”

இந்தியாவில் சாம்சங் ஜே8ன் விலை

இந்த ஃபோன் இந்தியாவில் ரூ. 18,990 என்ற விலையுடன் இன்று (ஜூன் 28) முதல் விற்பனையாகும். சாம்சங் இ-ஷாப் (Samsung’s e-shop) , பேடிஎம் ( Paytm), ஃப்ளிப்கார்ட் ( Flipkart) மற்றும் ஆமெசன் (Amazon) ஆகிய இணையவழி வர்த்தக தளங்கள் மற்றும் நேரடி சில்லறை விற்பனை அங்காடிகளிலும் கிடைக்கும். நீலம், கருப்பு மற்றும் தங்க நிறத்தில் விற்பனையாகும் இந்த ஃபோனில் 4ஜிபி ரேம்/64 ஜிபி சேமிப்பகம் மட்டுமே இந்தியாவில் கிடைக்கும்.

சேம்கங் கேலக்ஸி ஜே8ன் பொருள் விளக்கம் இரட்டை நேனோ சிம் வசதியோடு வரும் கேலக்ஸி ஜே8 ஃபோன் ஆன்ட்ராய்ட் 8.0 ஓரியோ தளத்தில் இயங்குகிறது. 6 இஞ்ச் கொண்ட 18:5:9 உருவக விகித்துடனான ஆமோலெட் ‘இன்ஃபினிடி டிஸ்ப்ளே’யுடன் வருகிறது இந்த ஸ்மார்ட்ஃபோன். ஓக்டா-கோர் குவால்காம் ஸ்நேப்ட்ராகன் (octa-core Qualcomm Snapdragon) 450 ப்ராசசரோடு 4ஜிபி ரேம் உள்ளது.

இரட்டை கேமரா உள்ள இந்த ஃபோனில் 16 மெகாபிக்ஸல் கொண்ட ப்ரைமரி கேமரா மற்றும் 5 மெகா பிக்ஸல் கொண்ட செகண்டரி கேமரா உள்ளது.

முன்புறம் உள்ள கேமரா 16 மெகாபிக்ஸல் கேமராவில் அபெர்சர் (aperture) எஃப்/1.9 உள்ளது. 64 ஜிபி உள்சேமிப்பகம் கொண்ட இந்த ஃபோனில் 256 ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்டி அட்டை பொறுத்த முடியும். இந்த ஸ்மார்ட்ஃபோனின் முக அங்கீகார அமைப்பில் வேரியபில் செல்ஃபி ஃப்ளாஷ் இருப்பதால் செல்ஃபி எடுக்கும் போது எக்ஸ்போஷரை தேர்வு செய்யலாம்.

face_reg

4ஜி வோல்டே (4G VoLTE), வைஃபை (Wi-Fi) , ப்ளூடூத் (Bluetooth), ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ் (GPS/ A-GPS), மைக்ரோ-யுஎஸ்பி போர்ட் (Micro-USB port) மற்றும் 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜேக் (3.5mm headphone jack) ஆகியவை கேலக்ஸி ஜே8 ஃபோனில் உள்ளது. ’சேட் ஓவர் வீடியோ’(Chat over Video) அம்சத்தை பயன்படுத்தி வீடியோ பார்த்துக்கொண்டே குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தலாம்.

experience

இந்திய ஆராய்ச்சி மற்றும் உருவாக்கப் பிரிவினால் இந்த அம்சம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது சாம்சங். வீடியோவின் மீது மெல்லியதான சேட் விண்டோ மற்றும் விசைப்பலகை வெளிப்படும். நினைவு மேலண்மை அம்சங்களான மூவ் டு மெமரி கார்ட், டெலீட் டூப்லிகேட் இமேஜஸ், சிப் அன்யூஸ்ட் ஏப்ஸ் (zip unused apps) மற்றும் டெலீட் சேவ்ட் ஏபிகே ஃபைல்ஸ் (delete saved APK ) ஆகியவை உள்ளது. சாம்சங் மெயில் மற்றும் மொபைல் பேமண்ட் அம்சமான சாம்சங் பே மினி ஆகியவையும் உள்ளன.

இதையும் படியுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here