அதிமுகவில் இனி கட்சிப் பொதுச்செயலாளர் பதவியே கிடையாது என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் ஒன்றாக இணைந்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமை (இன்று) அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை வானகரத்தில் நடைபெறும் இந்த பொதுக்குழுவில் கலந்துகொள்ள 2,140 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானங்களை வாசித்தார். அதில், பொதுச்செயலாளர் சசிகலாவின் நியமனத்தை ரத்து செய்தும், அதிமுகவில் இனி கட்சிப் பொதுச்செயலாளர் பதவியே கிடையாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

admk-meeting

மேலும், கட்சியின் ஒருங்கிணைப்புத் தலைவராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும், அதிமுக பொதுச்செயலாளருக்கு உள்ள அதிகாரம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு இருப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: “நீட்டுக்கு எதிராக போராடும் மாணவர்களை தமிழக அரசு மிரட்டுகிறது”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்