இனி பாடப் போவதில்லை: விஜய் யேசுதாஸ்

0
127

பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘மலையாள சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கும், பின்னணி பாடகர்களுக்கும் உரிய மரியாதை கிடைப்பதில்லை. எனவே இனி மலையாள சினிமாவில் பாடப்போவதில்லை’ என கூறியிருப்பது மலையாளத் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மலையாளத்தில்தான் பலமுறை பலரிடம் அவமானப்பட்டுள்ளதாகவும், எனவே இனியும் அந்த அவமானங்களைத் தாங்க முடியாது என்பதால் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த முடிவு மலையாளப் படங்களுக்கு மட்டும் தான் என்றும், தமிழ், தெலுங்கு மொழிகளில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அங்குப் பாடகர்களுக்கு நல்ல மரியாதை வழப்க்கப்படுகிறது என விஜய்யேசுதாஸ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here