சியோமி நிறுவனத்தின் Mi டிவி 4A ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இனி ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்கள் சியோமி ஸ்மார்ட்போன் போன்றே விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டன. குறைந்த விலை என்பதோடு சியோமி வழக்கப்படி இவை ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

அந்த வகையில் சியோமியின் Mi டிவி 4A மாடல் ப்ளிப்கார்ட் மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட்ட வந்த சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்கள் 32 மற்றும் 43 இன்ச் அளவுகளில் கிடைக்கின்றன.

அந்த வகையில் Mi டிவி 4A வாங்குவோர் இனி ஃபிளாஷ் விற்பனைக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கூடுதலாக ப்ளிப்கார்ட் சார்பில் ஒரே நாளில் விநியோகம் செய்யும் வசதி மற்றும் இலவச இன்ஸ்டாலேஷன், வட்டியில்லா மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இந்தியாவில் Mi டிவி 4A (32-இன்ச்) மாடலின் விலை ரூ.13,999 என்றும் 43 இன்ச் மாடல் ரூ.22,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு டிவி மாடல்களும் ப்ளிப்கார்ட்  மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம், Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது. 

சியோமி Mi டி.வி. 4A 32-இன்ச் சிறப்பம்சங்கள்:

– 32-இன்ச் 1366×768 பிக்சல் ஹெச்.டி. எல்இடி டிஸ்ப்ளே
– 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் 962-SX கார்டெக்ஸ்-A53 பிராசஸர்
– மாலி-450 MP3  GPU
– 1 ஜிபி ரேம்
– 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
– MIUI டி.வி. சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்
– வைபை 802.11 a/b/g/n, 3 x HDMI , AV,  யு.எஸ்.பி. 2.0 x 2, ஈத்தர்நெட்
– H.263, H.264, H.265, MPEG1 / 2/4, WMV3, VC-1 வசதி
– 2 x 10W டோம் ஸ்பீக்கர்
– ஸ்டீரியோ, DTS
சியோமி Mi டி.வி. 4A 43-இன்ச் சிறப்பம்சங்கள்:

– 43-இன்ச் 1920×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே
– 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் T962- கார்டெக்ஸ்-A53 பிராசஸர்
– மாலி-450 MP5  GPU
– 2 ஜிபி ரேம்
– 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
– MIUI டி.வி. சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்
– வைபை 802.11 a/b/g/n, 3 x HDMI , AV,  யு.எஸ்.பி. 2.0 x 2, ஈத்தர்நெட், SPDIF போர்ட்
– HDR 10, HLG, H.265 4K @ 60 / 30 fps, H.265 1080P @ 60 fps வசதி 
– H.263 1080P @ 30 fps, MPEG1 / 2/4 DivX4 வசதி
– 2 x 10W டோம் ஸ்பீக்கர்
– டால்பி விர்ச்சுவல் சரவுண்ட் சவுண்டு, DTS மற்றும் பாஸ் பூஸ்ட்

புதிய ஸ்மார்ட் டிவிக்களில் பேட்ச்வால் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்த பேட்ச்வால் யூசர் இன்டர்ஃபேஸ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது. செட்-டாப் பாஸ் மற்றும் ஆன்லைன் என தரவுகளை ஒற்றை தளத்தில் வழங்கும் வேலையை பேட்ச்வால் செய்கிறது. இத்துடன் வாடிக்கையாளர்கள் அதிகம் பார்த்து ரசிக்கும் தகவல்களை நினைவில் கொண்டு அதற்கேற்றவாரு வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரைகளை வழங்கும். 

courtesy: maalaimalar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here