இனிமேல் நடிக்கப் போவதில்லை – பிரபல நடிகையின் திடீர் முடிவு

0
156


த்ரிஷாவின் பிறந்தநாளின் போது, டார்லிங் நாம கல்யாணம் பண்ணிக்கலாமா சட்டமும் அதை அனுமதிக்குது என்று த்ரிஷாவுக்கு வாழ்த்து செய்தி சொன்ன நடிகை சார்மியை நினைவிருக்கிறதா? இணையத்தில் ஃபயர் கிளப்பிய சார்மி நடிப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

டிஆரின் காதல் அழிவதில்லை படத்தில் அறிமுகமானவர் சார்மி. அந்தப் படத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக இருந்த எஸ்டிஆர் பெரிய நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு காதல் கிசுகிசு, லாடம் உள்பட பல தமிழ்ப் படங்களில் சார்மி நடித்தார். மலையாளம் போன்ற பிற மொழிகளில் அவர் நடித்தாலும் தெலுங்கே அவரது அடையாளமாக இருந்தது. தெலுங்குப் படங்களை தயாரிக்கவும் செய்தார். சார்மி நடித்த கடைசிப்படம் சில தினங்கள் முன்பு தெலுங்கு மாநிலங்களில் வெளியானது.

இனிமேல் நடிப்பதில்லை என்றும் படங்களை தயாரிக்கப் போவதாகவும் சார்மி அறிவித்துள்ளார். இதனை அவர் தரப்பும் உறுதி செய்துள்ளது. சார்மியின் ரசிகர்களுக்கு இது கசப்பான செய்திதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here