உலகம் முழுவதும் கோடிக் கணக்கானனோரால் பயன் படுத்தப்பட்டு வரும் செல்போன் இயங்குதளம் ஆண்ட்ராய்டு. புதிய இயங்கு தளத்தை வெளிவிடும் போது இனிப்பு வகைகளின் பெயர்களை வைப்பது ஆண்ட்ராய்டு வழக்கம். இந்நிலையில், இனி புதிதாக வரும் ஆண்ட்ராய்ட் வெர்சனில், இனிப்புகளின் பெயர்கள் வைக்கும் வழக்கத்தை கைவிடுவதாக கூகிள் ஆண்ட்ராய்ட் தெரிவித்துள்ளது.

கப்கேக், டோனட், எக்லைர், ஃப்ரோயோ, ஜிஞ்சர்பிரெட், ஹனிகோம்ப், ஐஸ்கிரீம்சேண்ட்வெஜ், ஜெல்லிபீன், கிட்கேட், லாலிபாப், மார்ஸ்மல்லொ, நவுகேட், ஓரியோ, பை எனஅதன்பெயர்கள் இனிப்பு வகைகளைச் சார்ந்ததாகவே இருந்ததுஆனால், அடுத்துவரவிருக்கும் ஆண்ட்ராய்ட் Q-ற்கு எந்த இனிப்பு வகையின் பெயர் வைக்கப்படாது என்றும், இனி இனிப்பு பெயர் வரிசையையே கை விடப்போவதாக கூகிள் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூகிள் ஆண்ட்ராய்ட் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் புதிய இயங்கு தளமான ஆண்ட்ராய்ட்  Q-விற்கு ஆண்ட்ராய் 10 என்று பெயரிட்டுள்ளது. இனி வரும் காலங்களில் வெளியாகும் ஆண்ட்ராய்ட் இயங்குதளங்கள் ஆண்ட்ராய்ட் -11, ஆண்ட்ராய்ட்-12 என்ற வரிசையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்கு முன்பு வைக்கப்பட்ட ஆண்ட்ராய்ட் இயங்கு தளங்களின் பெயர்கள் உலகளாவிய சந்தையில் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை என்றும் அதன் காரணமாக அனைவருக்கும் எளிதாக புரியும் வகையில் பெயர்கள் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதே இந்த திடீர் பெயர் மாற்றத்திற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் புதிய லோகோவையும் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here