இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

0
173

மார்ச் 1 முதல் தென்னிந்திய திரையுலகம் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால் பிப்ரவரிக்குள் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் முனைந்துள்ளனர். நாளை பிப்ரவரி 9 ஆம் தேதி நான்கு தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.

ஆகாஷ் சுதாகர் என்பவர் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் நரி வேட்டை என்ற படத்தை நாளை வெளியிடுகின்றனர். அறிமுகமில்லாத நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என்பதால் இந்தப் படம் மீது எதிர்பார்ப்பு இல்லை.

நாளை அர்ஜுன் இயக்கத்தில் அவரது மகள் ஐஸ்வர்யா நடித்துள்ள சொல்லிவிடவா படம் வெளியாகிறது. மகளுக்காக அர்ஜுனே தயாரித்து இயக்கியிருக்கும் படம். காதல் கதை. இந்தப் படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இல்லை.

மிஷ்கின் எழுதி நடித்திருக்கும் சவரக்கத்தி நாளை வெளியாகிறது. அவரே தயாரிப்பு. மிஷ்கின் எதிர்நாயகனாகவும், ராம் நாயகனாகவும் நடிக்க மிஷ்கினின் உதவி இயக்குனரும், அவரது தம்பியுமான ஆதித்யா படத்தை இயக்கியுள்ளார். பூர்ணா நாயகி. படத்தின் ட்ரெய்லர் மிஷ்கினின் டெம்ப்ளேட் உடல்மொழிகள், ராமின் எக்ஸன்ட்ரிக் முகபாவங்கள் என மிரட்டுகிறது. மிஷ்கின் மீதான கிரேஸில் ஓபனிங் அள்ளும். மூன்று நாள்களுக்குப் பிறகு படம் தாக்குப்பிடிக்குமா என்பதை நாளை படம் பார்த்தே முடிவு செய்ய முடியும்.

சுந்தர் சி. யின் கலகலப்பு 2 நாளை வெளியாகிறது. ரசிகர்கள் ஒட்டு மொத்தமாக ஆவல் கொண்டுள்ள படம். ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேதரின் தெரேசா, மனோபாலா, கணேஷ் நடித்திருக்கிறார்கள். படத்தின் ட்ரெய்லர் நகைச்சுவைக்கு உத்தரவாதம் தருகிறது. இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட்டாக கலகலப்பு 2 அமைய வாய்ப்புள்ளது.

இந்த படங்களுடன் அக்ஷய் குமாரின் பேடு மேன் திரைப்படமும் வெளியாகிறது. இந்திப் படம் என்றாலும் ஒரு தமிழரின் கதை. படத்துக்கு உலக அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழகத்தில் – குறிப்பாக சென்னையில் படம் நல்ல வசூலை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

பேடு மேன், கலகலப்பு 2, சவரக்கத்தி, சொல்லிவிடா, நரி வேட்டை என நாளை வெளியாகும் படங்கள் மீதான எதிர்பார்ப்பை வரிசைப்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்: தேசம் காப்போம்

இதையும் படியுங்கள்: பஸ்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்