இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

0
327
Vijay Sethupathi, Ajith Kumar & Vijay

மார்ச் 1 முதல் புதிய தமிழ்ப் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இன்று முதல் படப்பிடிப்புகள், போஸ்ட் புரொடக்ஷன், சினிமா விழாக்கள் என எதுவும் நடைபெறப் போவதில்லை. திரையரங்கு உரிமையாளர்களும் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இந்நிலையில் சென்னை மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் மட்டும் அபிராமி ராமநாதன் தலைமையில், வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். சென்னை சிட்டியில் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம் படங்களை வெளியிட்டு கல்லாவை நிரப்பலாம் என்ற சுயநலம்.

இன்று புதிய தமிழ்ப் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதேநேரம் பல இந்திப் படங்கள் வெளியாகியுள்ளன. அதில் அஜய் தேவ்கான் நடித்துள்ள ரெய்டு முக்கியமானது. நம்பி பார்க்கலாம்.

தெலுங்கில் கிராக் பார்ட்டி படம் வெளியாகியுள்ளது. பல படங்களில் இது எதிர்பார்ப்புக்குரியதாக பார்க்கப்படுகிறது.

மலையாளத்தில் பல வருடங்களாக அண்டர் புரொடக்ஷனில் இருந்த நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸின் பூமரம் வெளியாகியுள்ளது. இதில் இடம்பெற்ற பூமரம் பாடல் பல கோடி பார்வையாளர்களைப் பெற்று யூடியூபில் அசத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர இரா என்ற மலையாளப் படமும் வெளியாகியுள்ளது.

ஆங்கிலப் படங்களைப் பொறுத்தவரை சார்லீஸ் த்ரோன் தயாரித்து நடித்துள்ள கிரிங்கோ வெளியாகியுள்ளது. இதுவொரு டார்க் க்யூமர் திரைப்படம். ராட்சஸ விலங்குகள், சூப்பர் ஹீரோக்கள் என்று எதுவுமில்லாததால் நம்மவர்கள் திரையரங்கு பக்கம் எட்டிப் பார்ப்பார்களா என்பது சந்தேகம்.

இந்தப் படங்களுடன் வேதாளம், மெர்சல், விக்ரம் வேதா, பாட்ஷா என பழைய படங்களையும் திரையிடுகிறார்கள்.

இதையும் படியுங்கள்: ’தெலுங்கு மக்களை பாஜக ஏமாற்றி விட்டது’; கூட்டணியை முறித்துக்கொண்ட தெலுங்கு தேசம்

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

இதையும் படியுங்கள்: #OvercomeOckhi: ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்