இந்த மாநிலத்தில் கொரோனாவால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை: இன்று புதிதாக யாருக்கும் பாதிப்பும் இல்லை

0
83

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளபோதும் சில மாநிலங்கள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிரம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. அந்த வகையில், வடகிழக்கு மாநிலமான மிசோரம் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளபோதும் மிசோரம் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை.

இந்நிலையில், அம்மாநிலத்தில் இன்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என்ற மகிழ்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரத்தை மிசோரம் மாநில அரசு வெளியிட்டது. அதில் மாநிலத்தில் இன்று புதிதாக யாருக்கும் கொரோனா பரவவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரத்து 253 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 253 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 95.34% என்ற அளவில் உள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 105 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பிற்கு மிசோரத்தில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நன்றி : மாலைமலர் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here