இந்த நாள்… உங்க காலண்டர்ல குறிச்சு வச்சுக்குங்க

0
139

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்குகிறது. முறையான அறிவிப்புக்கு முன்பே படம் எப்போது வெளியாகும் என்பது குறித்த செய்திகள் வரத்தொடங்கியுள்ளன.

முன்னணி நடிகர்களின் படங்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் வெளியாகும்போது, அவற்றின் வசூல் 30 சதவீதம்வரை அதிகரிக்கும். நடிகர்களுக்கும், இயக்குநர்களுக்கும் இந்த பண்டிகை தினங்கள் எப்போதும் மைய டார்கெட்டாக இருக்கும். விஜய் நடித்துவரும் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. சரி, ரஜினி படம்…?

2020 பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். முருகதாஸ் – ரஜினி இணைகிறார்கள் என்பதே படத்துக்கு எக்ஸ்ட்ரா மைலேஜை கொடுத்திருக்கிறது. அதனை பொங்கலுக்கு வெளியிட்டால் வசூல் சாதனை நிச்சயம். இதனை மனதில் வைத்து லைகா 2020 பொங்கலை தேர்வு செய்திருக்கிறது.

அதேநேரம், தீபாவளிக்கு முன்பே படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here