இந்த ஆண்டின் மிக சிறந்த நகைச்சுவை : பிரதமரை புகழ்ந்து பேசிய நீதிபதிக்கு வலுக்கும் கண்டனம்

Several retired judges have expressed their dismay over comments made by Justice Arun Mishra at the International Judicial Conference in New Delhi on Saturday, 22 February, in which the sitting judge of the Supreme Court effusively praised Prime Minister Narendra Modi.

0
927

பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வை கொண்டவர் எனப் புகழ்ந்து பேசிய உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி அருண் மிஷ்ராவுக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சர்வதேச அளவில் தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா பொறுப்புணர்வு மற்றும் நட்புமிக்க நாடாகவும் விளங்குகிறது எனப் பேசினார்.

இந்நிலையில்,அவரது இந்த பேச்சுக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் பலர் கண்டம் தெரிவித்து கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர், பிரதமர் மோடியை இவ்வாறு புகழ்ந்து பேசுவது தேவையற்றது எனவும், இதுபோன்ற கருத்துகள் நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் என அவர்கள் குறிப்பிட்டனர்.

நீதிபதி அருண் மிஷ்ராவின் கருத்து இந்த ஆண்டின் மிக சிறந்த நகைச்சுவை எனவும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சாவந்த் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here