பதவி இல்லையெனில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தூக்கம் வராது என அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரியும் தமிழகத்தில் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வரும் சனிக்கிழமையன்று (செப்.16) திருச்சி உழவர் சந்தை மைதானத்தில், அதிமுக அம்மா அணி சார்பில், நீட் தேர்விலிருந்து விலக்களிக்க அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெறும் என டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். இந்த மாநாட்டிற்கு திருச்சி மாநராட்சி அனுமதி மறுத்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், முதல்வர் பழனிசாமியை மாற்ற முயற்சிக்கிறோம் என்றும், இல்லையேல் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர், இந்த ஆட்சி இனிமேலும் நீடிப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல என்றும், பதவி இல்லையெனில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தூக்கம் வராது என்றும் தெரிவித்தார். இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என மக்களே விரும்புவதாகவும், இன்னும் பத்து நாட்களுக்குள் மாற்றம் வரும் என்றார்.

இதையும் படியுங்கள்: ”ரோஹிங்யா முஸ்லிம்களை இந்தியா வெளியேற்ற கூடாது”: ஜவாஹிருல்லா

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்