இந்தோ-சீன எல்லை ராணுவ ரோந்து பணியில் இரட்டை திமில் ஒட்டகம்: இந்திய ராணுவம் முடிவு

DRDO is rearing double-humped camels which will be deployed at DBO and Depsang in eastern Ladakh to be used by the Indian Army for patrolling and transportation.

0
133

கிழக்கு லடாக்கில் கல்வான்பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டு 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.  இதன்பின்னர் எல்லை பகுதியில் பதற்றம் அதிகரித்தது.  எனினும் படைகளை சீனா வாபஸ் பெறும்படி இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இரட்டை திமில் கொண்ட  ஒட்டகத்தை, இந்திய ராணுவத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒட்டகங்களை, லடாக்கில், இந்தியா – சீன எல்லையில் ரோந்து பணியில் ஈடுபடுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

170 கிலோ எடையை சுமக்கும் திறன்பெற்ற, இந்த இரட்டை திமில் கொண்ட  ஒட்டகங்களை, லடாக்கின் 17 ஆயிரம் அடி உயரத்தில் பயன்படுத்துவது குறித்து, லேயில் உள்ள பாதுகாப்பு மற்றும்ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பு(டிஆர்டிஓ) ஆய்வு செய்துள்ளது.

இது தொடர்பாக டிஆர்டிஓ விஞ்ஞானி பிரபு பிரசாத் சாரங்கி கூறுகையில், இரட்டை திமில் கொண்ட  ஒட்டகங்கள் குறித்து நாங்கள் ஆய்வு செய்தோம். இவை உள்ளூர் விலங்குகள். இவை எவ்வளவு எடை சுமக்கும் என்பது ஆய்வு செய்தோம். லடாக்கின் கிழக்கு பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் சீன எல்லையில் நடந்த ஆய்வில் 170 கிலோ எடையுடன் அவை, 12 கி.மீ. தூரம் ரோந்து செல்லும் என்பதை கண்டறிந்துள்ளோம். இந்த ஒட்டகத்தை ராணுவத்தில் பயன்படுத்துவது குறித்து சோதனை முயற்சி செய்யப்பட்டது. விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்படும். தற்போது எண்ணிக்கையில் குறைவாக உள்ள இந்த ஒட்டகங்களை, எண்ணிக்கையை அதிகரித்த பின்னர், விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்படும் எனக் கூறினார்.

double-hump-camel

ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒற்றைத் திமில் ஒட்டகங்களுடன், இரட்டை திமில் கொண்ட  ஒட்டகங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இரட்டைத் திமில் ஒட்டகங்கள், உணவு மற்றும் தண்ணீரின்றி 3 நாட்கள்உயிர் வாழும் திறன் பெற்றது. இந்த ஒட்டகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்பின்னர் அவை ராணுவத்தில் சேர்த்து கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here