இந்தோனேஷிய பேரழிவுக்கு கூகுள் நிறுவனம் சார்பில் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று சுந்தர் பிச்சை அறிவித்தார். 
இந்தோனேஷியாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஏற்பட்ட பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,234 – ஆக அதிகரித்துள்ளது. மேலும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், இந்தோனேஷியாவுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிவாரணத்தொகையை கூகுள் நிறுவனம் சார்பில் வழங்கப்படும் என அதன் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்தார். 
மேலும், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பேரழிவு எங்களுக்கு மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே கூகுள் நிறுவனம் சார்பில் நிவாரணத்தொகையாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என்று சுந்தர் பிச்சை ட்விட்டர் மூலமாக அறிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பாதிப்பு குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில் கூகுள் சார்பில் முன்னெச்சரிக்கை செயலி அறிமுகப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here