இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே ஞாயிற்றுக்கிழமை (இன்று) அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவாகியுள்ளது. சுமத்ரா தீவு அருகேயுள்ள பெங்க்குலு என்னும் பகுதியிலிருந்து மேற்கே 73 கிலோமீட்டர் தொலைவில் 35.9 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் பாதிப்புகள் குறித்த எந்தத் தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

இதையும் படியுங்கள்: ”நீதிபதிக்கே பாதுகாப்பில்லாத இலங்கைக்கு எப்படித் திரும்புவோம்?”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்