இந்து-முஸ்லிம் பிரிவினையில் அதிக ஆர்வம் காட்டுகிறார் பிரதமர் மோடி என்று அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் 5 ஜி, தொழில்நுட்பம் என்று பேசிக்கொண்டிருக்கும் உலகில் நமது பிரதமர் காங்கிரஸ் கட்சி இஸ்லாமிய கட்சி என்று பேசுகிறார் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மோடியை கிண்டல் செய்துள்ளார்.

நடைபெற போகும் மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக இந்தூரில் நடைபெற்ற ஆம் ஆத்மி பொதுக் கூட்டத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கலந்துக் கொண்டு பேசினார். அப்போது

“5 ஜி தொழில்நுட்படம் என்று உலகமே பேசிக்கொண்டிருக்கும் போது , நமது பிரதமர் காங்கிரஸ் இஸ்லாமிய கட்சி, பாஜக இந்து கட்சி என விளக்கம் தருகிறார். இந்தியாவில், 3 ஜி கூட சரியாக வேலை செய்வதில்லை என்று கிண்டலாக மோடியை கலாய்த்தார்.

மேலும் மோடி ஹிந்து-முஸ்லிம் பிரிவினைத் தொடர்பான பிரச்சனைகளில் அதிக ஆர்வம் காட்டுகிறார் என்றும் மக்களின் முக்கியமான பிரச்சனைகள் பற்றி பேசாமல் மத பிரிவினை பற்றியே பேசி வருகிறார். மோடி இவ்வாறு பேசுவது மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் எந்த வளர்ச்சியும் அடையவில்லை என்பதை உறுதி செய்கிறது.

இந்த பொதுக்கூட்டத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் பேசிக்கொண்டிருக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதற்காக, அவர் மின்சார துண்டிப்பு குறித்து வருந்துவதாக தெரிவித்தார்.

மற்ற மாநில முதல்வர் இங்கு வரும் போதே மின்சாரம் துண்டிக்கப்படுகிறது என்றால், இந்த மாநில மக்களின் நிலை குறித்து நான் வருந்துகிறேன் என்று கூறினார்.

நடைபெற போகும் மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அகர்வாலை அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் ஆசம்கரில் பேசிய மோடி, “காங்கிரஸ் மூஸ்லீம்களின் கட்சி என காங்கிரஸ் தலைவர் கூறியதாக செய்தித்தாளில் படித்தேன், இதில் எனக்கு ஆச்சரியம் இல்லை. நான் கேட்க நினைப்பதெல்லாம் ஒன்று தான், அவர்களது கட்சி முஸ்லிம் ஆண்களுக்கு மட்டுமானதா அல்லது பெண்களுக்குமானதா? என்று கூறினார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here