இந்து மதத்தை இழிவுபடுத்துவதையே திமுகவைச் சேர்ந்தவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள் என செய்தித்துறை மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், தமிழை ஆண்டாள் குறித்த கருத்தரங்கத்தில், கவிஞர் வைரமுத்து பேசிய சில கருத்துக்கள் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ”கவிஞர் வைரமுத்து சொன்ன கருத்துக்கள், பொதுவாகவே, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் இந்து மதத்தைப் பழிப்பதை, இழிவுபடுத்தும் செயலை தங்கள் வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு.மு.கருணாநிதி அவர்கள் எவ்வழியோ, அவ்வழியே அனைத்துத் தொண்டர்களும் அவரைப் பின்பற்றி, இந்து மதத்தைப் புண்படுத்துபவர்களாக, அதை ஒரு வழக்கமான நடைமுறையாக கொண்டிருக்கின்றார்கள் என்பது நிதர்சனமான உண்மை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றார்கள்.

kadambur

சேது சமுத்திர திட்டத்தை பற்றி ஒரு உரையாடல் வருகின்ற நேரத்தில், திராவிட முன்னேற்றக் கழக தலைவர் திரு.மு.கருணாநிதி, இராமர் என்ன பெரிய கட்டடப் பொறியாளரா? வல்லுநரா? என்று சொல்லி விமர்சனம் செய்தது, இதுபோல, பல்வேறு சம்பவங்கள் இருக்கின்றது. அந்த வழியாகத்தான், இன்றைக்கு, கனிமொழி, கவிஞர் வைரமுத்து போன்றவர்கள் எல்லாம் கொச்சைப்படுத்தியிருக்கின்றார்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.” என்றார்.

இதையும் படியுங்கள்: “கப்பல் படையில் மீனவர்களைச் சேருங்கள்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்