காவல்துறையையும், நீதிமன்றங்களையும் கேவலமாக விமர்சித்த பாஜகவின் ஹெச்.ராஜாவை ட்விட்டரில் கடுமையாக கண்டித்துள்ளார் நடிகர் சித்தார்த்.

அரசியல், சமூக நிகழ்வுகளு;கு உடனுக்குடன் பதிலளிக்கும் தைரியமும், துணிச்சலும் தமிழ் நடிகர்களில் அரிதாக சிலருக்கே உள்ளது. நடிகர் சித்தார்த் அதில் ஒருவர். சமீபத்தில் மசூதி அருகில் விநாயகர் சதுர்த்திக்கு மேடை அமைக்க போலீஸ் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹெச்.ராஜா காவல்துறையையும், நீதிமன்றங்களையும் இழிவாகப் பேசினார். போலீசார் வெட்கமே இல்லாமல் அவரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர். இந்த வீடியோ வைரலானது. இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் நடிகர் சித்தார்த்,

“துhத்துக்குடி பிரச்சனையில் போராட்டக்காரர்களை சுட்டுக்கொன்ற தமிழக போலீஸ், உயர்நீதிமன்றம், காவல்துறை, சிறுபான்மையினர் குறித்து இமாசமாக பேசும்போது இந்த ரேபிட் இடியட்டை சும்மா வேடிக்கைப் பார்க்கிறது. இதிலிருந்து அவர்கள் எந்தப் பக்கம் என தெரிகிறது. அந்த இந்துத்துவா தீவிரவாதிக்கு சட்டமும், அரசியலமைப்பும் என்ன என்பதை காட்ட வேண்டும்.”

சித்தார்த்தின் ஹெச்.ராஜா மீதான இந்த ‘இடியட்’, ‘இந்துத்துவா தீவிரவாதி’ விமர்சனத்துக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here