இந்துக்களுக்கு எதிராக பேசியது போல் காட்டப்பட்டுள்ளேன் – கமல்ஹாசன் விளக்கம்

0
143

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்னர் அரவக்குறிச்சியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, பேசிய கருத்துகள், சர்ச்சைக்கு உள்ளானது. இது குறித்து தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார். 

அரவக்குறிச்சியில் சில நாட்களுக்கு முன்னர் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசன், முஸ்லீம்கள் நிறைய பேர் இருக்கும் இடம் என்பதனால் இதை சொல்லவில்லை, காந்தியின் சிலைக்கு முன்னால் இதைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே.  நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். 

அந்த கொலைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன் . அப்படி நினைத்துக்கொள்ளுங்கள். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக, மூவர்ணக்கொடியில் மூவர்ணமும் அப்படியே இருக்கும் ஒரு இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் என்பதை மார்தட்டிச் சொல்வேன்” என்று பேசினார்.

கமலின் இந்த கருத்துக்குத் தொடர்ந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. குறிப்பாக பாஜக, வலதுசாரி அமைப்புகள் கமலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “கமலின் நாக்கை அறுக்க வேண்டும்” என்று கூறி மேலும் பரபரப்பை கூட்டினார்.

கமல்ஹாசன் மீது  பல்வேறு இடங்களில் கமல் மீது பாஜகவினர் புகார் அளிக்கத் தொடங்கியுள்ளனர். 

இப்படிப்பட்ட சூழலில் கமல்ஹாசன், தான் கூறிய கருத்து குறித்து, நான் மத நல்லிணக்கத்தை கோரும் நோக்கில் அப்படி பேசினேன். அனைத்து மதத்தவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்ற நோக்கில் பேசினேன். எந்த மதத்தில் அடிப்படைவாதம் பின்பற்றப்பட்டாலும் அது தவறுதான்.

நான் பேசியது தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்துக்களுக்கு எதிராக பேசியது போன்று காட்டப்படுகிறது. அப்படி செய்வதற்கு கண்டிப்பாக உள் நோக்கம் இருக்கிறது. இந்த விஷயம் சாதாரண மக்கள் மத்தியில் குழப்பத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here