இந்திரா ஜெய்சிங் யார்? :குற்றவாளிகளை எப்படி மன்னிக்க முடியும்? : ஆஷா தேவி

0
200

நிர்பயாவை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகளை எப்படி மன்னிக்க முடியும் என்று அவரது தாய் ஆஷா தேவி கேள்வி எழுப்பியுள்ளார்.

நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் பிப்ரவரி 1 ஆம் தேதி 6 மணிக்கு தூக்கிலிட  டெல்லி நீதிமன்றம் நேற்று(வெள்ளிக்கிழமை) புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் வழியைப் பின்பற்றி, அவர் தனது கணவரைக் கொன்ற குற்றவாளிகளை எவ்வாறு மன்னித்தாரோ அதுபோல, நிர்பயா குற்றவாளிகளை மன்னித்துவிடலாம் என்று ஆஷா தேவிக்கு யோசனை கூறியிருந்தார்.

இந்த யோசனை குறித்து  ஆஷா தேவி, தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

எனக்கு இதுபோன்ற ஒரு யோசனையைக் கூற இந்திரா ஜெய்சிங் யார்? நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்றுதான் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் நினைக்கிறார்கள். ஆனால், இவரைப் போன்ற ஒரு சிலரால்தான், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சட்டம் மூலம் நியாயம் கிடைக்காமல் போகிறது என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே, நிர்பயா விவகாரத்தில் சிலர் அரசியல் செய்கிறார்கள் என்று ஆஷா தேவி நேற்று குற்றம்சாட்டியிருந்த நிலையில், இன்று இந்த கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here