இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை (இன்று) காலை முதல் சரிவுடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 366.48 புள்ளிகள் சரிந்து 34,700.27 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 135.60 புள்ளிகள் சரிந்து 10,625.00 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.15ஆக உள்ளது.

2வது நாளாகத் தொடர்வது ஏன்?

நீண்ட நாள் லாபத்தில் விற்கும் பங்குகளுக்கு, மத்திய பொது பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட 10 சதவிகிதம் வரியின் தொடர் தாக்கம் மற்றும் ஆசியாவின் முக்கிய சந்தைகளாகக் கருதப்படும் ஜப்பான் (Nikkei) மற்றும் தென்கொரிய (Kospi index) பங்குச் சந்தைகள் முறையே 2.66 சதவிகிதம் மற்றும் 1.66 சதவிகித வீழ்ச்சியுடன் காணப்படுவதும் சந்தை வீழ்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்க பங்குச் சந்தைகள் கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியையும் சந்தித்துள்ளன. இதுபோன்ற சாதகமற்ற சூழல்களால் இந்திய சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஏற்பட்ட கடும் சரிவினால் முதலீட்டாளர்களுக்கு 4.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

[orc]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here