இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (இன்று) காலை முதல் உயர்வுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 46.04 புள்ளிகள் உயர்ந்து 33,839.42 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 17.70 புள்ளிகள் உயர்ந்து 10,460.90 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.51ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்: மனச்சோர்வுக்கு ஆளாகி தற்கொலை எண்ணம் வருகிறதா உங்களுக்கு ? இதைப் பாருங்கள்

1. அமெரிக்க பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. மேலும் ஆசிய பங்குச் சந்தைகளில் முக்கியமானவையாகக் கருதப்படும் ஜப்பான் பங்குச் சந்தைகள் (Nikkei) 2.59 சதவிகிதம் உயர்ந்தும், தென்கொரியா பங்குச் சந்தைகள் (KOSPI) 0.24 சதவிகிதம் உயர்ந்தும் காணப்படுகின்றன.

2. H1B விசா கால நீட்டிப்பு விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால், அமெரிக்காவிலிருந்து லட்சக்கணக்கான இந்தியர்கள், வெளியேற வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு மட்டுமின்றி அமெரிக்க நிறுவனங்களுக்கும் பாதகமாக அமைப்பும் என இந்திய மென்பொருள் நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் தெரிவித்துள்ளது.

3. இஸ்ரேலிடமிருந்து ஸ்பைக்ஸ் ரக ஏவுகணைகளை வாங்குவதற்காக சுமார் ரூ.3,100 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு இஸ்ரேல் வருத்தம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்