இந்திய வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 9.5 லட்சம் கோடியாக உயரும் என இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்கூட்டமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஷிப் பிரதாப் சுக்லா, கடந்த மார்ச் 31ஆம் வரை வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 8.5 லட்சம் கோடியாகவுள்ளது என மத்திய ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தாண்டு மார்ச் மாத இறுதிக்குள் இதன் மதிப்பு 9.5 லட்சம் கோடியாக உயரும் என இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்கூட்டமைப்பின் (Assocham) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் கடன்பெற்ற நிறுவனமோ அல்லது தனிநபரோ, அதனைத் திருப்பிச் செலுத்தாதநிலையில், அந்தத் தொகையானது வாரக்கடனாக இருக்கும். இந்த வாரக்கடன் நிலை குறிப்பிட்ட காலம் வரை நீடித்தால், இந்த கடன்தொகையானது, வாராக் கடன்களாக அல்லது செயல்படாத சொத்துக்களாகக் கருதப்படும்.

source: livemint.com

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here