திங்களன்று மார்க்கெட் முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு 43 காசுகள் வீழ்ச்சி அடைந்தது.
அரசு பத்திரங்களை வாங்குமாறு ரிசர்வ் வங்கி கோரிக்கை வைத்து வருகிறது
புதன்கிழமையான இன்றைய சந்தையின் தொடக்கத்தின்போது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 73.34- ஆக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த தகவலை பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பங்குச் சந்தைக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்றைய தொடக்கத்தின்போது வரலாறு காணாத அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு கடும்  வீழ்ச்சியை சந்தித்துள்ளது. திங்களன்று முடிவின்போது, இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 72.91- ஆக இருந்தது.
ரூபாய் மதிப்பு தொடர்பான தகவல்கள்
* அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ. 36,000 கோடியை பணச்சந்தையில் புழக்கத்தில் விடுவோம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
*அரசு வெளியிடும் பத்திரங்களை வாங்குமாறு ரிசர்வ் வங்கி கோரிக்கை வைத்து வருகிறது.
*சர்வதேச அளவில் ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகள் சற்று வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
* கடந்த 6 வாரங்களாக ஈரோ நாணயத்தின் மதிப்பு குறைந்து வருகிறது.
*இத்தாலி நாட்டின் கடன் சுமை அதிகரித்து வருகிறது. ரோம் திட்டமிட்டுள்ள பட்ஜெட் ஐரோப்பிய யூனியனின் ஆதரவை கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்று சரிவை சந்தித்து வருகிறது.courtesy: Ndtv

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்