இந்திய ரூபாயின் மதிப்பு சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகராக தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.

இந்நிலையில், ரூபாய் மதிப்பு இன்று காலை வர்த்தகத்தில் மீண்டும் இதுவரை இல்லாத அளவு சரியத் தொடங்கியது. இன்று காலை 22 காசுகள் சரிந்து 72.91 என்ற நிலையை எட்டியது.

வெளிநாட்டு மற்றும் இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் பங்கு விற்பனை, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் 72.74 என்ற அளவில் சரிந்தது. அதன்பின்னர் சற்று ஏற்றம் பெற்று நேற்றைய வர்த்தக முடிவில் 72.69 என்ற நிலையில் இருந்தது.

உலக அளவில் டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாடுகளும் சரிவினைச் சந்தித்து வருகின்றன. ஈரான் ரியால் மதிப்பு ஒரு டாலருக்கு நிகராக 1 லட்சத்து 20 ஆயிரம் என்ற அளவில் சரிவடைந்தது. அதுபோலவே, இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டது.

கச்சா எண்ணெய் விலை நேற்றைய வர்த்தகத்தின்போது 2 சதவீதம் அதிகரித்த நிலையில், இன்று 0.35 சதவீதம் குறைந்தது. அதேசமயம் இந்திய பங்குச்சந்தையில் இன்று காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 133.29 புள்ளிகள் உயர்ந்து, 37546.42 புள்ளிகளாக இருந்தது.

(இச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

இதையும் படியுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here