இந்திய ராணுவம் மோடியின் படை: யோகி ஆதித்யநாத்துக்கு கண்டனம் தெரிவித்த ராணுவ அதிகாரிகள்

0
233


இந்திய  ராணுவம்  மோடியின்  படை  என்ற  உத்தரபிரதேச  முதல்வர்  யோகி  ஆதித்யநாத்   பேச்சுக்கு  கண்டனங்கள்   வலுக்கின்றன.

 மக்களைவைத்  தேர்தல்  நடைபெற  உள்ள  நிலையில்  இந்திய  பாதுகாப்பு  படைகளை  தேர்தல்பிரசாரத்திற்காக  பயன்படுத்தக்கூடாது  என  தேர்தல்  ஆணையம்  உத்தரவிட்டுள்ளது.   ஆனால் டெல்லியில்  பாஜக  பேரணியின்  போது  விமானப்படை  வீரர்  அபிநந்தனின்  புகைப்படம்  இடம்பெற்றபேனர்கள்  வைக்கப்பட்டது.  மேலும் பாஜக  வெளியிட்ட  ‘நானும்  காவலாளி’  வீடியோவிலும்  ராணுவம் இடம்பெற்றது.  இதன்  காரணமாக  பாஜகவுக்கு  தேர்தல்  ஆணையம்  நோட்டீஸ்  விடுத்துள்ளது.

இந்நிலையில்  ராணுவம்மோடியின்  படை  என்ற  உத்தரபிரதேச  முதல்வர்  யோகி  ஆதித்யநாத்பேச்சுக்கு  கண்டனங்கள்  வலுக்கின்றன.

உத்தரபிரதேசத்தில்  நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய  யோகி ஆதித்யநாத்   காங்கிரஸ் பயங்கரவாதிகளுக்கு  பிரியாணி  கொடுத்தது,  ஆனால்  மோடியின்  ராணுவம்  அவர்களுக்கு  புல்லட்மற்றும்  வெடிகுண்டுகளை  பரிசாக  வழங்கியது என்றார்.

இந்திய  பாதுகாப்பு  படைகள்  பிரதமரின்  படைகள்  கிடையாது. இந்த  பேச்சுக்கு  யோகி  ஆதித்யநாத்மன்னிப்பு  கேட்க  வேண்டும்  என  காங்கிரஸ்  கண்டனம்  தெரிவித்துள்ளது.

 சமூக  வலைத்தளங்களிலும்  யோகியின்  இந்தப்  பேச்சு  பலத்த  கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும் , தற்போது பணியில் இருக்கும் அதிகாரிகளும் யோகி ஆதித்யநாத்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ராணுவ வீரர்களின் மரணத்தை அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது  என்றும் கூறியுள்ளனர் .

இது குறித்து தேர்தல் கமிஷனும் விளக்கம் கேட்டுள்ளது . 

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here