நாட்டிற்காக போரிட வேண்டிய தேவையேற்பட்டால்,மூன்றே நாட்களில் ஒரு ராணுவத்தையே உருவாக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் முடியும் என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத், நாட்டிற்காக போரிட வேண்டிய தேவையேற்பட்டால், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மூன்றே நாட்களில் ஒரு ராணுவத்தை உருவாக்க முடியும் என்றும், ஆனால் இந்திய ராணுவத்திற்கு இதனைச் செய்ய ஆறு முதல் ஏழு மாதங்களாகும் என்றும் பேசினார். அவரின் இந்தப் பேச்சு, இந்திய ராணுவத்தை அவமானப்படுத்தும் விதமாக உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மன்மோகன் வைத்யா, நாட்டிற்காக போரிட வேண்டிய தேவையேற்பட்டால், சாதாரண குடிமகன்கள் தயாராவதற்கு ஆறு முதல் ஏழு மாதங்களாகும் என்றும், ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் விரைவில் தயாராகி விடுவார்கள் எனவும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாகத் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தையும், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பையும் ஒப்பிட்டு மோகன் பகவத் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்