மோடி அரசு இந்திய ராணுவத்துடன் இருக்கிறதா அல்லது சீனாவுடன் இருக்கிறதா? – மீண்டும் மோடியைச் சீண்டும் ராகுல்

This morning the government told Parliament that no infiltration had been reported along the LAC (Line of Actual Control, the de facto border with China) over the past six months

0
180

இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்து இருக்கிறது என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தற்போது இந்திய ராணுவத்துடன் மோடி அரசு இருக்கிறதா அல்லது சீனாவுடன் இருக்கிறதா? இதை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது என்று பதிவு செய்துள்ளார்.

எல்லையில் இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்து இருக்கிறது என்று ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். எப்போது இழந்த நிலப்பகுதியை மோடி அரசு மீட்கப்போகிறது என்று கேள்வி எழுப்பி வந்தார். இந்த நிலையில் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் முன்பு இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். அதே நேரம் சீன வங்கியிடமிருந்து இந்தியா அரசு ரூ9000 கோடி கடன் வாங்கியுள்ளது. பின்பு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்து இருக்கிறது என்று கூறினார். இதைத் தொடர்ந்து இன்று விளக்கம் அளித்து இருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம், ”இந்திய எல்லைக்குள் கடந்த ஆறு மாதங்களில் சீனாவில் இருந்து எந்த ஊடுருவலும் இல்லை” என்று தெரிவித்துள்ளது. 

மோடி தலைமையிலான இந்திய அரசு இந்திய ராணுவத்துடன் இருக்கிறதா அல்லது சீனாவுடன் இருக்கிறதா? என்றும் ஏன் மோடி ஜி பயப்படுகிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here