இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை (இன்று) சரிவுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 73.81 புள்ளிகள் சரிந்து 33,102.19 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 28.40 புள்ளிகள் சரிந்து 10,166.75 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.05ஆக உள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனப் பங்குகள் 4.28 சதவிகிதம் சரிந்தும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் 3.81 சதவிகிதம் சரிந்தும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தின் பங்குகள் 3.06 சதவிகிதம் சரிந்தும் காணப்படுகின்றன.

இதையும் படியுங்கள்: எழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்