இந்திய பார் கவுன்சில் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஆகஸ்ட் 11) டெல்லியில் நடைபெற்றது. அப்போது காளான்கள் போல சட்டக்கல்லூரிகள் முளைப்பது பற்றிய பிரச்சினை எழுப்பட்டது. அதுபற்றி விவாதித் கவுன்சில், அதன் பின் வெளியிட்ட அறிக்கையில்கூறப்பட்டுள்ள விபரம் வருமாறு :

நாட்டில் தற்போது 1,500 சட்டக்கல்லூரிகள் உள்ளன. வக்கீல்களுக்கு பற்றாக் குறையும் இல்லை. இப்போதுள்ள கல்லூரிகளில் இருந்து ஆண்டுதோறும் வெளிவரும் வக்கீல்களே போதுமான அளவில் உள்ளனர். பல்கலைக்கழகங்கள் மற்றும் சில மாநிலங்களின் மந்தமான நடவடிக்கையால் பலகல்லூரிகள் சரியான கட்டமைப்பு இல்லாமல் செயல்படுகின்றன. மாநில அரசுகள் அரசு சட்டக்கல்லூரிகளில் சட்ட ஆசிரியர்களை நியமிப்பதில் எப்போதாவதுதான் கவனம் செலுத்துகின்றன. சட்டக்கல்லூரிகள் தொடங்க மாநில அரசுகள் தடையில்லா சான்றுகள் கொடுக்கின்றன. பல்கலைக்கழகங்களும் பொறுப்பற்றமுறையில் அதற்கு அனுமதி கொடுக்கின்றன. பெரும்பாலான ஊரக பகுதிகளில் சட்ட தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதை பல்கலைக்கழகங்களால் தடுக்க முடியவில்லை. மாநில அரசுகளும் இந்த முறைகேடுகளை தடுப்பதில் எந்த ஆர்வமும் காட்டுவதில்லை.

90 சதவீத சட்டகல்லூரிகள் தங்கள்தரத்தை உயர்த்த எந்த மானியமும் பெறுவதில்லை. எல்.எல்.எம். அல்லதுபிஎச்.டி. பட்டம் பெறுவது மிக சுலபமாகி விடுகிறது. இந்த காரணத்தால் நாட்டில் நல்ல சட்ட ஆசிரியர்களுக்கு கடும் பற்றாக்குறை உள்ளது. எல்.எல்.எம்., பிஎச்.டி. பட்டங்கள் இந்திய பார்கவுன்சில் கட்டுப்பாட்டில் இல்லை.

2016-ல் 2 வருடங்களுக்கு புதிய சட்டகல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் தொடங்க மாநில அரசுகளும், பல்கலைக்கழகங்களும் அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம். அதே சமயம் இருக்கும் கல்லூரிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் 300 தடையில்லா சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்திய பார்கவுன்சில் அனுமதி மறுத்ததும் சிலர் கோர்ட்டுகளுக்கு சென்றனர். ஐகோர்ட்டும் பரிசீலிக்கும்படி கூறியுள்ளதால் நிலுவையில் உள்ள பரிந்துரைகள் பற்றி பரிசீலித்து வருகிறோம். எனவே புதிதாக கல்லூரிகள் தொடங்குவதற்கான விண்ணப்பங்களை ஊக்குவிக்கும் எண்ணம் இல்லை. தேசிய சட்டபல்கலைக்கழகங்கள் தவிர 3 வருடங்களுக்கு புதிய சட்டகல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தொடங்குவது நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த 3 வருடங்களில் உரிய உள்கட்டமைப்பு அல்லது ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கி வரும் சட்டகல்லூரிகள் மூடப்படும். மாநில அரசுகளும், பல்கலைக்கழகங்களும் 4 மாதங்களுக்குள் காலியான சட்ட ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதுடன், சட்டதேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு இந்தியபார்கவுன்சில் அறிவித்துள்ளது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here