இந்திய பாதுகாப்புக்கு மிகபெரிய அச்சுறுத்தலாக சீனா மாறியுள்ளது என முப்படை தலைமை தளபதி விபின் ராவத் தெரிவித்துள்ளார். இமாலய மலைப்பகுதியை காப்பாற்றும் வகையில் கடந்தாண்டு அங்கு விரைவாக குவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வீரர்கள் ராணுவ தளத்திற்கு மீண்டும் திரும்புவதற்கு நீண்ட காலமாகும் என்றும் பிபின் ராவத் குறிப்பிட்டுள்ளார்.

சீன விவகாரம் குறித்து  விரிவாக பேசிய பிபின் ராவத் , “அணு ஆயுத நாடுகளான இந்திய, சீனாவுக்கிடையேயான எல்லை சச்சரவை தீர்ப்பதில் நம்பிக்கையின்மையும் அதிகரித்துவரும் அவநம்பிக்கையும் முக்கிய பிரச்னையாக இருக்கிறது” என்றார்.

இதையும் படியுங்கள் : 👇
.

கடந்த மாதம், இந்திய, சீன கமாண்டர்களுக்கிடையே 13ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், எல்லையிலிருந்து படைகளை எப்படி விலக்கி கொள்வது என்பதில் இருநாடுகளுக்கிடையே ஒத்த கருத்து ஏற்படாத நிலையில், எந்த வித தீர்வும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டது.

கடந்த மே மாதம், இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே மோசமான மோதல் வெடித்தது. ஜூன் மாதம் 3,488 கிலோமீட்டர் எல்லையில் நடந்த மோதலில் 20 இந்தியர்களும் குறைந்தது நான்கு சீன ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக, நீண்ட கால எதிரியான பாகிஸ்தானிலிருந்து தனது கவனத்தை இந்தியா சீனா மீது திருப்பியது.

இதையும் படியுங்கள் : 👇
.

இதையடுத்து, இமாலாய மலைப்பகுதி அருகே, இந்தியாவும் சீனாவும் உள்கட்டமைப்பை வலுப்படுத்த தொடங்கியது. வீரர்களை குவித்தது. இதுகுறித்து பேசிய பிபின் ராவத் , “எல்லையிலும், கடலிலும் எந்த அசம்பாவிதத்தையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது” என்றார்.

திபெத் தன்னாட்சி பகுதிக்கும் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்திற்கும் நடுவே அமைந்துள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா பெரிய கிராமத்தை எழுப்பியுள்ளதாக அமெரிக்க ராணுவம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here