இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 8 வது முறையாக முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.

IIFL Wealth Hurun India என்ற ஆய்வு அறிக்கையின்படி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, மூன்று லட்சத்து 80ஆயிரத்து 700 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். அவர் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கிறார். 

இந்துஜா சகோதரர்கள் ஒரு லட்சத்து 86ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுடன் இரண்டாமிடத்திலும், விப்ரோ நிறுவனர் அஸிம் பிரேம்ஜி ஒரு லட்சத்து 17ஆயிரத்து 100 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

தொழிலதிபர் எல்.என்.மிட்டல் ஒரு லட்சத்து ஆயிரத்து 300 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் நான்காம் இடத்திலும், கவுதம் அதானி 94ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுடன் 5ஆவது இடத்திலும் உள்ளனர்.

இந்திய பணக்காரர்கள் பட்டியல்

1. முகேஷ் அம்பானி – ரூ.3,80,700 கோடி

2. ஹிந்துஜா சகோதரர்கள் – ரூ.1,86,500 கோடி

3. அஸிம் பிரேம்ஜி – ரூ.1,17,100 கோடி

4. எல்.என்.மிட்டல் -ரூ.1,01,300 கோடி

5. கவுதம் அதானி – ரூ.94,500 கோடி  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here