கச்சா எண்ணெய் விலை சரிவு, ரூபாய் மதிப்பு குறைவு, கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால் வாரத்தின் முதல் நாளிலேயே இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,320 புள்ளிகள் சரிந்து 35,256ல் வர்த்தகம் ஆகிவருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிஃப்டி 645 புள்ளிகள் சரிந்து 10,339ல் வர்த்தகம் ஆகிவருகிறது. பங்குச் சந்தைகள் வீழ்ச்சி காரணமாக வாடிக்கையாளர்களுக்கு 7.72 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 10% வீழ்ச்சி அடைந்துள்ளது.  இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் 188  நிறுவனங்களில் பங்கு மதிப்பு உயர்ந்துள்ளது. 520 நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிந்துள்ளது.69 நிறுவன பங்குகளில் எந்த மாற்றமும் இல்லை. இதனிடையே ரிசர்வ் வங்கி கையகப்படுத்திய யெஸ் வங்கியின் பங்குகள் பங்குச் சந்தை 30% உயர்வை கண்டுள்ளது. யெஸ் வங்கியில் முதலீடு செய்யவுள்ளதாக எஸ்பிஐ அறிவித்த நிலையில், பங்குகள் இவ்வாறு உயர்வை கண்டுள்ளது.அதே சமயம் எஸ்பிஐ வங்கியின் பங்கு மதிப்பு சரிவை சந்தித்துள்ளது.

இதனைதொடர்ந்து ஒஎன்ஜிசி-யின் பங்கு விலை 11 விழுக்காடும், வேதாந்தா பங்கு விலை பத்து விழுக்காடும் வீழ்ச்சியடைந்தது.இதனிடையே 29 ஆண்டுகளில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை 30% சரிவை கண்டுள்ளது. ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக இன்று மேலும் சரிவடைந்துள்ளது. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 74.0087 ரூபாய் என்ற அளவில் உள்ளது.

இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி

கொரோனா வைரஸ் பாதிப்பு துவங்கியதில் இருந்தே சர்வதேச பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன.  இதன் எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதிகபட்ச சரிவாக, கடந்த மாதம் 28ம் தேதி வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 1,448.37 புள்ளிகள் சரிந்து 38,297.29 ஆக இருந்தது. இதுபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 414.10 புள்ளிகள் சரிந்து 11,219.20 ஆனது. இதனால், ஒரே நாளில் பங்குகளின் மதிப்பு 5,53.013.66 கோடி சரிந்து 1,46,87,010.42 ஆக ஆனது.

மும்பை பங்குச்சந்தை இதற்கு முன்பு 2015 ஆகஸ்ட் 24ம் தேதி 1,624 புள்ளிகள் சரிந்ததே அதிகபட்ச சரிவாக இருந்தது. தற்போதைய சரிவுக்கு கொரோனா வைரஸ்தான் பிரதான காரணமாக கருதப்படுகிறது.  கொரோனா வைரஸ் பிற நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அனைத்து நாடுகளும் எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கொரோனா வைரசால் ஆசிய பசிபிக் நாடுகளின் பொருளாதாரம் 20,000 கோடி டாலருக்கு மேல் இழப்பை சந்திக்கும் என்ற புள்ளி விவரங்கள் வெளியானது மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here