இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 554 புள்ளிகள் சரிவு

0
194

இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமையன்று கடும் சரிவுடன் முடிவடைந்தன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 554.50 புள்ளிகள் சரிந்து 24,851.83 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 172.70புள்ளிகள் சரிந்து 7,568.30 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவு பெற்றது.

கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெயின் விலையில் சரிவு ஏற்பட்டது. கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 34.23 டாலர் என்ற அளவுக்கு கீழே சென்றது. கடந்த 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலையில் இந்த சரிவுநிலை ஏற்பட்டது.

ஆசியப் பங்குச் சந்தைகளில் முக்கிய சந்தைகளான ஹாங்காங் பங்குச் சந்தை மூன்று சதவிகிதம், ஜப்பான் 2.33 சதவிகிதமும், சிங்கப்பூர் 2.65 சதவிகிதமும் சரிந்தன.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்